/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இணைப்பு ரோடு வளைவு பகுதி சேதம்; வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு
/
இணைப்பு ரோடு வளைவு பகுதி சேதம்; வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு
இணைப்பு ரோடு வளைவு பகுதி சேதம்; வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு
இணைப்பு ரோடு வளைவு பகுதி சேதம்; வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு
ADDED : டிச 22, 2025 05:23 AM

உருக்குலைந்த ரோடு கோதவாடி பிரிவிலிருந்து, நல்லட்டிபாளையம், கிணத்துக்கடவு இணைப்பு ரோட்டின் வளைவு பகுதி சேதமடைந்திருப்பதால், வாகன ஓட்டுநர்கள் நிலை தடுமாறி செல்கின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் வளைவு பகுதியில் திரும்பும் போது தடுமாறி விழுகின்றனர். எனவே, ரோட்டை விரைவில் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.
-- ஜெகதீஷ்: செடிகள் அகற்றப்படுமா? கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் அருகே, சர்வீஸ் ரோட்டோரம் நடைபாதை அருகில் அதிகளவில் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் அவ்வழியில் நடந்து செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதர் செடிகளை அகற்ற வேண்டும்.
-- சந்தோஷ்: குறுக்கு பட்டையால் தொல்லை கிணத்துக்கடவு -- வடசித்தூர் ரோட்டில், லட்சுமி நகர் அருகே ரோட்டின் வளைவு பகுதியில், வெள்ளை குறுக்குப்பட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இவ்வழியாக வரும் வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, ரோட்டில் உள்ள குறுக்கு பட்டையை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- பிரகாஷ்: 'பார்க்கிங்' செய்ய சிரமம் வால்பாறை நகரில் சுற்றுலா பயணியர் தங்கள் வாகனங்களை 'பார்க்கிங்' செய்ய போதிய இடவசதி இல்லாததால் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சுற்றுலா பயணியர் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் சார்பில், கூடுதல் 'பார்க்கிங்' வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
-- கிரண்: போக்குவரத்துக்கு இடையூறு உடுமலை அனுசம்நகர் ரோட்டில் இரவு நேரத்தில் கார்களை நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவராம்: சேதமடைந்த ரோடு விருகல்பட்டி புதுார் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன்: வேகத்தடை வேண்டும் உடுமலை அருகே ஜல்லிபட்டி நால் ரோடு சந்திப்பு வேகத்தடை இல்லாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. வாகன ஓட்டுனர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுவாமிநாதன்: சுற்றுச்சுவர் சே தம் உடுமலை அருகே குறிச்சிக்கோட்டை அங்கன்வாடிமைய வளாக சுவர் சேதமடைந்துள்ளது. இதனால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. எனவே, குழந்தைகள் நலன கருதி, சுற்றுச்சுவரை சீரமைக்க துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகன்: நோய் பரவும் அபாயம் உடுமலை பஸ்ஸ்டாண்ட் கழிப்பிடம் பராமரிப்பு இல்லை. இதனால், துர்நாற்றம் வீசி நோய் பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி அதிகாரிகள் பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடத்தை சுத்தம் செய்து, பராமரிக்க வேண்டும்.
- கருப்பசாமி: போக்குவரத்துக்கு இடையூறு உடுமலை காந்திநகர் பஸ் ஸ்டாப் முன் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டள்ளது. இதனால், வாகன ஓட்டுனர்களின் கவனம் சிதறும் வாய்ப்புள்ளது. போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, இடையூறாக வைக்கப்படும் பேனர்களை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜா: சாக்கடை மூடி சேதம் பொள்ளாச்சி, பனிக்கம்பட்டி ரோட்டின் நடுவே பாதாள சாக்கடை மூடி அருகில் ரோடு சேதம் அடைந்து குழி ஏற்பட்டுள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். மக்கள் நலன் கருதி இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.
-- குகன்:

