/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்த மின்கம்பங்கள் விரைவில் மாற்றப்படும்
/
சேதமடைந்த மின்கம்பங்கள் விரைவில் மாற்றப்படும்
ADDED : அக் 03, 2025 09:08 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம் மயானம் செல்லும் ரோட்டோரத்தில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
கிணத்துக்கடவு, கோதவாடி பிரிவு எதிரே, நெ.10.முத்தூர் செல்லும் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் இருந்து சிங்கராம்பாளையம் மயானம் செல்லும் ரோட்டோரத்தில் இரண்டு மின் கம்பங்கள் கீழே விழுந்துள்ளது. அதில், ஒன்று இரண்டாக உடைந்துள்ளது.
மேலும், கம்பத்தில் இருந்த மின்கம்பிகள் அறுந்து கீழே கிடக்கிறது. இந்த மின்கம்பங்கள் மழைக்கு சாய்ந்ததா அல்லது வாகனம் மோதி உடைந்ததா என தெரியவில்லை. இந்த ரோட்டின் இரு பகுதிகளிலும் தென்னை விவசாயம் மட்டுமே உள்ளது. குடியிருப்புகள் அதிகம் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'இங்கு சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின் ஒயர்களை மாற்றம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.