/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்த கிராமப்புற ரோடு; சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
/
சேதமடைந்த கிராமப்புற ரோடு; சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
சேதமடைந்த கிராமப்புற ரோடு; சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
சேதமடைந்த கிராமப்புற ரோடு; சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : டிச 03, 2024 05:58 AM
கிணத்துக்கடவு; வடசித்தூரில் இருந்து குருநல்லிபாளையம், கப்பளாங்கரை செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது.
கிணத்துக்கடவு, வடசித்தூரில் இருந்து குருநல்லிபாளையம், கப்பளாங்கரை ரோடு வழியாக, தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. கடந்த சில மாதங்களாக, இந்த ரோட்டில் கனரக வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது.
இந்த ரோடு, கிராமப்புற சாலை என்பதால் ரோட்டின் அகலம் சற்று குறுகளாகவே உள்ளது. இந்த ரோட்டில் சிறிய அளவிலான வாகனங்கள் எதிரெதிரே வந்தாலும், கனரக வாகனங்கள், டிப்பர் லாரி மற்றும் டெம்போக்கள் செல்லும் பொழுது எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இது மட்டுமின்றி, இந்த ரோட்டில் அதிக அளவு வளைவு உள்ளது. ரோட்டின் ஒரு சில பகுதி சேதமடைய துவங்கி உள்ளது. சில இடங்களில் புதர் சூழ்ந்தும், மின்விளக்குகள் இல்லாமலும் காணப்படுகிறது. இதனால், பைக் ஓட்டுநர்கள் இரவு நேரத்தில் செல்லும் போது தடுமாற்றம் அடைகின்றனர்.
புதர் நிறைந்திருக்கும் இடங்களில், எதிரே வரும் கனரக வாகனங்களால் பைக் ஓட்டுநர்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த வழித்தடத்தில் ரோட்டின் ஓரத்தில் உள்ள புதர்களை சுத்தம் செய்து, சேதமடைந்துள்ள பகுதியை சீரமைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.