/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலுவைத்தொகை வழங்கப்பட்டதால் 'டான்டீ' தொழிலாளர்கள் மகிழ்ச்சி
/
நிலுவைத்தொகை வழங்கப்பட்டதால் 'டான்டீ' தொழிலாளர்கள் மகிழ்ச்சி
நிலுவைத்தொகை வழங்கப்பட்டதால் 'டான்டீ' தொழிலாளர்கள் மகிழ்ச்சி
நிலுவைத்தொகை வழங்கப்பட்டதால் 'டான்டீ' தொழிலாளர்கள் மகிழ்ச்சி
ADDED : பிப் 16, 2026 05:54 AM
வால்பாறை: வால்பாறையில் உள்ள தமிழ்நாடு தேயிலைத்தோட்ட கழகத்தில், டான்டீ தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணிக்கொடை மற்றும் விடுப்புடன் கூடிய ஊதியம் வழங்கப்பட்டது.
சின்கோனா(டான்டீ) அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, கோட்ட மேலாளர் வடிவேல் தலைமை வகித்தார். விழாவில், தி.மு.க., நகரச்செயலாளர் சுதாகர், கவுன்சிலர் உமாமகேஸ்வரி ஆகியோர், தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிலுவைத்தொகையினை வழங்கினர்.
டான்டீ அதிகாரிகள் கூறுகையில், 'சின்கோனா டான்டீ தேயிலை தோட்டத்தில் கடந்த, 2022 முதல், 2025 வரையிலான காலகட்டத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை மற்றும் விடுப்புடன் கூடிய ஊதியம் வழங்கப்பட்டது.
மொத்தம், 73 அதிகாரிகள், 904 தொழிலாளர்கள் உட்பட, 977 பேருக்கு, ரூ.5 கோடியே, 82 லட்சத்து, 50 ஆயிரம் மதிப்பிலான தொகை வழங்கப்பட்டது' என்றனர்.
டான்டீ தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகை வழங்கப்பட்டதால், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.