/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவிப்பு பலகை இல்லாததால் அபாயம்
/
அறிவிப்பு பலகை இல்லாததால் அபாயம்
ADDED : பிப் 21, 2026 07:50 AM

நெகமம்: பொள்ளாச்சி, பல்லடம் ரோட்டில் இருந்து தண்ணீர் பந்தல் திரும்பும் ரோட்டில், அறிவிப்பு பலகை இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது.
பொள்ளாச்சி, பல்லடம் ரோட்டில் இருந்து தண்ணீர் பந்தல் மற்றும் வெள்ளாளபாளையம் செல்லும் இணைப்பு ரோட்டின் நடுவே, சிறிய அளவில் மைய தடுப்பு உள்ளது.
அங்கு, எவ்வித அறிவிப்பு பலகைகளும், ஒளிரும் ஸ்டிக்கர் உள்ளிட்டவைகள் இல்லாததால் வாகன ஓட்டுநர்கள் ரோட்டில் திரும்பும் போது தடுமாறுகின்றனர். இரவு நேரங்களில் பைக்கில் வந்து திரும்பும் போது மையத் தடுப்பு சரியாக தெரியாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
எனவே, இங்கு விபத்து ஏற்படுவதை தடுக்க, மையத் தடுப்புகளில் ஒளிரும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

