/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளைவில் காத்திருக்கும் ஆபத்து: விபத்து தவிர்க்க தடுப்பு அவசியம்
/
வளைவில் காத்திருக்கும் ஆபத்து: விபத்து தவிர்க்க தடுப்பு அவசியம்
வளைவில் காத்திருக்கும் ஆபத்து: விபத்து தவிர்க்க தடுப்பு அவசியம்
வளைவில் காத்திருக்கும் ஆபத்து: விபத்து தவிர்க்க தடுப்பு அவசியம்
ADDED : நவ 25, 2025 05:37 AM

வால்பாறை: மலைப்பாதை வளைவுகளில், விபத்து ஏற்படுவதை தவிர்க்க, தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகரிலிருந்து நல்லகாத்து வழியாக முடீஸ் செல்லும் ரோடு உள்ளது. நகரில் இருந்து சோலையாறு எஸ்டேட் ஆர்ச் வரையிலும், நகராட்சி சார்பில் கான்கிரீட் ரோடு போடப்பட்டுள்ளது.
நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த ரோட்டில், வளைவுகளில் தடுப்புச்சுவர் இல்லாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: வால்பாறை நகரிலிருந்து சோலையாறு ஆர்ச் வரையிலான, 2 கி.மீ., துாரம் உள்ள ரோடு நகராட்சி வசம் உள்ளது. இந்த ரோட்டில் உள்ள ஆபத்தான வளைவுகளில் தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை.
சுற்றுலா வாகனங்கள், அரசு பஸ்கள், கனரக வாகனங்கள் செல்லும் இந்த ரோட்டில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள், இந்த ரோட்டை ஆய்வு செய்து தேவையான இடத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். விபத்து ஏற்படுவதற்கு முன் இந்த பணியை துவங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

