/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் கம்பங்களில் படரும் கொடிகளால் விபத்து அபாயம்
/
மின் கம்பங்களில் படரும் கொடிகளால் விபத்து அபாயம்
மின் கம்பங்களில் படரும் கொடிகளால் விபத்து அபாயம்
மின் கம்பங்களில் படரும் கொடிகளால் விபத்து அபாயம்
ADDED : நவ 18, 2025 03:23 AM

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்களில் படரும் கொடிகளால் விபத்து அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
தற்போது பருவ மழை காலம் என்பதால், அடிக்கடி மழை பெய்து வருகிறது. குறிப்பாக, புறநகர் பகுதிகளில் செடி, கொடிகள் அபரிமிதமாக வளர்ந்து மின் பாதைகளில் உள்ள மின்கம்பங்களில் மின்தடைக்கு காரணமாகி விடுகிறது.
மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டுவது, அதையொட்டி கம்பி வேலி அமைப்பது உள்ளிட்டவை பரவலாக நடந்து வருகிறது. இதனால் மின்னழுத்த குறைபாடுகளால், மின்சாதனங்கள் பழுதாவதும், கால்நடைகள், மனித உயிர்களுக்கு ஆபத்தும் ஏற்படுகிறது.
தமிழக மின்வாரியத்தால் மாதந்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக குறிப்பிட்ட நாள் ஒதுக்கப்பட்டு மின்தடை ஏற்படுத்தப்படுகிறது. ஆனாலும், பல இடங்களில் மின் கம்பங்களில் படரும் கொடிகள் சுத்தம் செய்யப்படாமல் பணிகள் கிடப்பில் போடப்படுகின்றன.
இதனால் மின்சாதனங்கள் பழுதாகி, அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும், மனித உயிர்களுக்கும் அச்சம் ஏற்படுகிறது. எனவே, மின்வாரியத்தினர் அலட்சியப் போக்கோடு இல்லாமல், மாதந்தோறும் மின்பாதைகளில் படரும் கொடிகளை அகற்றி, பாதுகாப்பான மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

