தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தனி இடஒதுக்கீடு கேட்கிறார்கள் காது கேளாதோர் நலச்சங்கத்தினர்

தனி இடஒதுக்கீடு கேட்கிறார்கள் காது கேளாதோர் நலச்சங்கத்தினர்

தனி இடஒதுக்கீடு கேட்கிறார்கள் காது கேளாதோர் நலச்சங்கத்தினர்


ADDED : செப் 23, 2026 09:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 09:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழ்நாடு காதுகேளாதோர் உரிமை நல சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், தற்போது வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 ஐ ரூ.6 ஆயிரமாக உயர்த்த வேண்டும், அரசு அலுவலகங்களில் சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும். வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், போலீசில் புகார் அளிக்க காது கேளாதோர், வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும், ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us