/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலியோ சொட்டு மருந்து முகாம்; விடுபட்டவர்களுக்கும் வழங்க முடிவு
/
போலியோ சொட்டு மருந்து முகாம்; விடுபட்டவர்களுக்கும் வழங்க முடிவு
போலியோ சொட்டு மருந்து முகாம்; விடுபட்டவர்களுக்கும் வழங்க முடிவு
போலியோ சொட்டு மருந்து முகாம்; விடுபட்டவர்களுக்கும் வழங்க முடிவு
ADDED : மார் 03, 2024 10:29 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், 304 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது.
பொள்ளாச்சி நகராட்சியில், கண்ணப்பன் நகர், அழகாபுரிவீதி, வடுகபாளையம் உள்ளிட்ட, 26 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம், நேற்று காலை, 7:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெற்றது.
நகராட்சியில் மொத்தம், 9,996 பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில், 9778பேருக்கு வழங்கப்பட்டது.
வடக்கு ஒன்றியத்தில், 98 மையங்களில், 6,649 பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில்,6,386 பேருக்கு வழங்கப்பட்டது. தெற்கு ஒன்றியத்தில், 79 மையங்களில் (நடமாடும் மையம் உள்பட) 6,996 பேருக்கு வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், 6717 பேருக்கு வழங்கப்பட்டது.
இதே போன்று ஆனைமலையில், 101 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'போலியோ சொட்டு மருந்து முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கு இரண்டு நாட்களில் வழங்கப்படும்,' என்றனர்.
உடுமலை
உடுமலை சுற்றுப்பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடந்தது.
குழந்தைகளை தாக்கும் போலியோ நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது.
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்துக்குட்பட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி நிர்வாக அலுவலகம், பொது இடங்களிலும் சிறப்பு முகாம் நடந்தது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்து முகாமில் பங்கேற்றனர்.

