/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
1,000 இடங்களில் கருப்பு கொடி ஏற்ற முடிவு
/
1,000 இடங்களில் கருப்பு கொடி ஏற்ற முடிவு
ADDED : மார் 21, 2025 10:59 PM
அன்னுார்; கோவை வடக்கு மாவட்டத்தில், ஆயிரம் இடங்களில் கருப்புக் கொடி ஏற்றப்படுகிறது.
கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் அன்னுாரில் நேற்று நடந்தது. வட்டாரத் தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முல்லைப் பெரியாறு, சிறுவாணி ஆகிய பிரச்னைகளில் தமிழகத்தை தொடர்ந்து கேரளா அரசு வஞ்சித்து வருகிறது. தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இதே போல் காவிரியில் ஆணையம் அறிவித்த நீரை வழங்காமல் தமிழகத்துக்கு கர்நாடக அரசு துரோகம் விளைவித்து வருகிறது.
தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வரும் இரு முதல்வர்களுக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிற தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவிநாசி, மேட்டுப்பாளையம், சூலூர் ஆகிய மூன்று தொகுதிகளில் ஆயிரம் இடங்களில் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது. பா.ஜ., கிளை, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் போராட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ராஜராஜ சாமி, சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.