/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற முடிவு
/
அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற முடிவு
ADDED : ஆக 06, 2025 09:04 PM

மேட்டுப்பாளையம்; சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடிட மேட்டுப்பாளையம் தாலுகாவில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பா.ஜ., சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆப்பரேஷன் சிந்தூரின் வெற்றியை மக்கள் மூவர்ணக் கொடி ஏந்தி கொண்டாடி மகிழ்ந்தார்கள். எனவே வரும் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடிட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திட பா.ஜ.,வினருக்கு தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, தமிழகத்தில் பா.ஜ., சார்பில் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடிட மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம் தலைமையில் குழு அமைத்துள்ளார். இதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி அளவிலான ஆலோசனைக் கூட்டம் காரமடை டீச்சர்ஸ் காலனி அருகே நடைபெற்றது.
கூட்டத்தில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு மண்டலங்களிலும் ஒரு தேசியக்கொடி பேரணி நடத்த வேண்டும். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வரும் ஞாயிற்றுக்கிழமை தூய்மை பணியில் ஈடுபட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் காரமடை நகர தலைவர் சதீஷ்குமார், நிகழ்ச்சியின் பொறுப்பாளர் சுவாமிநாதன், மாவட்ட பொதுச் செயலாளர் விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.----