தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போராட்டம் தீவிரப்படுத்த முடிவு

 போராட்டம் தீவிரப்படுத்த முடிவு

 போராட்டம் தீவிரப்படுத்த முடிவு


ADDED : பிப் 26, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலுார்: கணியூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் வேலுசாமி, கடந்தாண்டு ஜூன் மாதம், உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம், உங்களுடன் ஸ்டாலின் உட்பட அரசு முகாம்களில், ஊராட்சிக்கு கூடுதலாக குடிநீர் வழங்க வேண்டும், ஏழைகளுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை வகை மாற்றம் செய்து தர வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் வழங்கியிருந்தார். எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வி.ஏ.ஓ., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு பின்பும் நடவடிக்கையும் இல்லாததால், ஜன., 26ம் தேதி கிராம சபையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினார். கலந்தாய்வு கூட்டம் நடத்தி தீர்வு காண்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

நேற்று, கலந்தாய்வு கூட்டத்தில், மனுதாரர் வேலுசாமி மற்றும் பல அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 'கூட்டத்தில் உறுதியான எந்த முடிவும் எடுக்காமல், காலம் கடத்துவதையே நோக்கமாகவே கொண்டுள்ளனர்' என்று கூறி, போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us