ADDED : செப் 21, 2026 03:51 AM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை அருகே, ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், மான் வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட கரட்டூர் வனச்சுற்று. இப்பகுதியில், நேற்று வனத்துறையினர் ரோந்து சென்ற போது, சந்தேகப்படும் வகையில், காணப்பட்ட நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கரட்டூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்வேல், 59, என்பதும், அவர் மான் வேட்டையாடியதும் தெரியவந்தது. அவரிடமிருந்து, 10 கிலோ மான் இறைச்சியை பறிமுதல் செய்து கைது செய்யப்பட்டார்.
