தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அதிகார பகிர்வால் தவிர்க்கப்பட்ட தாமதம் 84 சதவீத சான்றிதழ் விண்ணப்பங்கள் ஏற்பு

அதிகார பகிர்வால் தவிர்க்கப்பட்ட தாமதம் 84 சதவீத சான்றிதழ் விண்ணப்பங்கள் ஏற்பு

அதிகார பகிர்வால் தவிர்க்கப்பட்ட தாமதம் 84 சதவீத சான்றிதழ் விண்ணப்பங்கள் ஏற்பு


UPDATED : நவ 12, 2026 07:16 PM

ADDED : நவ 12, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 07:16 PM ADDED : நவ 12, 2026 07:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: வருவாய்த்துறையில் அக். மாதம் பெறப்பட்ட சான்றிதழ் விண்ணப்பங்களில், 84.85 சதவீத விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

வருமானம், சாதி, இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற பொதுமக்கள் வருவாய்த்துறையை அணுகுகின்றனர். இதற்கு முன் சில சான்றிதழ்களுக்கு வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார் மற்றும் தாசில்தார் என நான்கு நிலைகளில் விசாரணை நடத்தி, உண்மை என அறிந்த பிறகே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதனால் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதை தவிர்க்க, சான்றிதழ் வழங்கும் அதிகாரம் துணை தாசில்தார் மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதன்படி, வி.ஏ.ஓ. ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார். வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து பரிந்துரை செய்வார். இறுதியாக, சம்பந்தப்பட்ட தாசில்தார் ஒப்புதல் அளித்து சான்றிதழ் வழங்குவார்.

விண்ணப்பத்தின் தற்போதைய நிலை மற்றும் நிராகரிப்புக்கான காரணம் ஆகியவற்றை விண்ணப்பதாரர்கள் அறியும் வகையில் இணையதளத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சான்றிதழ் கேட்டு அக். மாதம் மாவட்டம் முழுவதும் 24,499 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 21,041 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 1,269 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 1,192 மேல் விண்ணப்பங்கள் திருத்தங்களுக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. 914 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

அதிகபட்சமாக தெற்கு தாலுகாவில் 322, வடக்கில் 283, பொள்ளாச்சியில் 110, சூலூரில் 107, அன்னூரில் 90, ஆனைமலையில் 88, மேட்டுப்பாளையத்தில் 84, பேரூரில் 63, மதுக்கரையில் 55, கிணத்துக்கடவில் 47, வால்பாறையில் 20 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இவற்றில், இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பித்த 605, சிட்டிசன் செயலி 484, பிற மாவட்ட இ-சேவை மையங்களில் 180 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

திருப்பி அனுப்பிய விண்ணப்பங்களில் தேவையான திருத்தங்களை அனைத்து இ-சேவை மையங்களிலும் செய்யலாம். நிலுவை விண்ணப்பங்களை பரிசீலித்து சான்றிதழ் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்ப நிலவரம் (சதவீதம்)


ஏற்கப்பட்டவை | 84.85
நிராகரிக்கப்பட்டவை | 5.13
திருப்பி அனுப்பியவை | 5.01



தாலுகா வாரியாக நிராகரிப்பு


தெற்கு | 322
வடக்கு | 283
பொள்ளாச்சி | 110
சூலுார் | 107
அன்னுார் | 90
ஆனைமலை | 88
மேட்டுப்பாளையம் | 84
பேரூர் | 63
மதுக்கரை | 55
கிணத்துக்கடவு | 47
வால்பாறை | 20



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us