/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீயணைப்பு வீரர்கள் பற்றாக்குறையால் தீயை அணைப்பதில் காலதாமதம்
/
தீயணைப்பு வீரர்கள் பற்றாக்குறையால் தீயை அணைப்பதில் காலதாமதம்
தீயணைப்பு வீரர்கள் பற்றாக்குறையால் தீயை அணைப்பதில் காலதாமதம்
தீயணைப்பு வீரர்கள் பற்றாக்குறையால் தீயை அணைப்பதில் காலதாமதம்
ADDED : ஜன 16, 2025 05:43 AM
அன்னுார் : அன்னுாரில் தீயணைப்பு வீரர்கள் பற்றாக்குறையால் தீயை அணைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில், சூலூர் ஒன்றியத்திற்கு அடுத்தபடி அன்னுார் ஒன்றியத்தில் தான் அதிக ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. இத்துடன் ஜின்னிங் பேக்டரிகள், விசைத்தறிகள், வீவிங் மில்கள் உள்ளன. அன்னுார் மக்கள், 10 ஆண்டுகளாக தொடர்ந்து போராடியதன் விளைவாக, 2021ல் அன்னுாரில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
சொந்த நிலம் மற்றும் கட்டடம் இல்லாததால், சிறிய வாடகை கட்டிடத்தில், அன்னுார், மேட்டுப்பாளையம் சாலையில், ஜீவா நகரில், தீயணைப்பு நிலையம் அமைந்தது.
இதுகுறித்து மில் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: அன்னுாருக்கு அடுத்து, தெற்கில், 31 கி.மீ., தொலைவில் கணபதியிலும்,மேற்கே 20 கி.மீ., தொலைவில் உள்ள மேட்டுப்பாளையத்திலும் தான் தீயணைப்பு நிலையம் உள்ளது. அன்னுார் தீயணைப்பு நிலையத்தில் ஒரு வாகனம் மட்டுமே உள்ளது. குறைந்த வீரர்களே உள்ளனர். கூடுதல் வாகனம் ஒதுக்க வேண்டும்.
தீயணைப்பு வீரர்களை அதிகப்படுத்த வேண்டும். சொந்த கட்டடம் அமைத்து தர வேண்டும். இதற்காக மூன்று ஆண்டுகளாக போராடி மேட்டுப்பாளையம் சாலையில் மங்கா பாளையம் பிரிவில், 21 சென்ட் நிலம் அரசு ஒதுக்கியது. அரசு நிலம் ஒதுக்கி 11 மாதங்கள் ஆகிவிட்டது.
வருகிற பட்ஜெட்டிலாவது அன்னுார் தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த கட்டடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும். இங்கு வாரம் ஒரு தீ விபத்து நடக்கிறது.
ஆனால் ஒரு வாகனமும், குறைந்த வீரர்கள் மட்டுமே உள்ளதால் தீயை விரைவில் கட்டுப்படுத்த முடிவதில்லை. கூடுதல் தீயணைப்பு வீரர்களை நியமிக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு அ.மேட்டுப்பாளையத்தில் நடந்த தீ விபத்திலும் மூன்று மணி நேரத்துக்கு மேல் போராடிதான் தீயை கட்டுப்படுத்தினர். எனினும் பஞ்சு குடோன் முழுமையாக எரிந்து விட்டது.
இவ்வாறு மில் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.