தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தவறை சரி செய்யாதததால் திட்ட மதிப்பீட்டில் குழப்பம்

தவறை சரி செய்யாதததால் திட்ட மதிப்பீட்டில் குழப்பம்

தவறை சரி செய்யாதததால் திட்ட மதிப்பீட்டில் குழப்பம்


ADDED : செப் 16, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கோதவாடி முழு நேர ரேஷன் கடை கட்டட மதிப்பீடு குறித்து, கல்வெட்டில் மாறுபட்ட தொகை குறிப்பிட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சியில், கடந்த 2024ல் புதிதாக முழுநேர ரேஷன் கடை கட்டப்பட்டது. கடையின் மேற்கூரை கல்வெட்டில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி, 10 லட்சம் ரூபாய் எனவும், கட்டடத்தில் பதிக்கப்பட்ட கல்வெட்டில், 12 லட்சம் ரூபாய் எனவும் மதிப்பீடு குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதனால், ரேஷன் கடை கட்டட மதிப்பீடு எவ்வளவு என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தில், முறைகேடு நடந்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தியிடம் கேட்ட போது, ரேஷன் கடை கட்டுமானத்துக்கு, 10 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. தவறாக குறிப்பிட்டுள்ள கல்வெட்டை மாற்றும் படி, அப்போது இருந்த அதிகாரிகள் அறிவுறுத்தினர். விரைவில் மாற்றம் செய்யப்படும்,’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us