/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சம்பளம் வழங்குவதில் தாமதம்; கிராமசபை கூட்டத்தில் புகார்
/
சம்பளம் வழங்குவதில் தாமதம்; கிராமசபை கூட்டத்தில் புகார்
சம்பளம் வழங்குவதில் தாமதம்; கிராமசபை கூட்டத்தில் புகார்
சம்பளம் வழங்குவதில் தாமதம்; கிராமசபை கூட்டத்தில் புகார்
ADDED : டிச 13, 2025 05:05 AM
அன்னூர்: 'சம்பளம் தாமதமாக வழங்கப்படுகிறது' என, சிறப்பு கிராம சபை கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
வடவள்ளி ஊராட்சியில், கடந்த 2024 ஏப்ரல் 1 முதல், 2025 மார்ச் 31 வரை, 100 நாள் வேலை திட்டத்தில் செய்யப்பட்ட பணிகள் வட்டார வள அலுவலர் கார்த்திக் ராஜா தலைமையில் தணிக்கையாளர்களால் கடந்த நான்கு நாட்களாக தணிக்கை செய்யப்பட்டது. பணிகள் அளவீடு செய்யப்பட்டன. தணிக்கை அறிக்கை தயாரிக்கப்பட்டது.
தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கும் சிறப்பு கிராம சபை கூட்டம், பெரிய புத்தூரில் நேற்று நடந்தது. தணிக்கை அறிக்கையில், வடவள்ளி ஊராட்சியில், 61 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்க்கு, 35 பணிகள் செய்யப்பட்டுள்ளன; இதில் 14 ஆட்சேபனைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
100 நாள் திட்ட தொழிலாளர்கள் பேசுகையில், 'வேலை செய்து பல வாரங்களுக்கு பிறகே சம்பளம் தருகின்றனர். ஒவ்வொரு வாரமும் வழங்க வேண்டும். 150 நாள் வேலை தர வேண்டும்' என்றனர்.
கூட்டத்தில், மாவட்ட வள பயிற்றுனர் சுந்தரராஜ், பற்றாளர் யமுனா தேவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பீமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

