‘ஜெனோரா’ வாடிக்கையாளர்களை இணைத்த இனிய மாலைப்பொழுது
‘ஜெனோரா’ வாடிக்கையாளர்களை இணைத்த இனிய மாலைப்பொழுது
ADDED : செப் 20, 2026 06:33 PM
கோவை: ஜென்விஸ்டாஸ் ரியால்டி சார்பில் அவிநாசி ரோடு, மெர்லிஸ் ஹோட்டலில் ‘ப்ரவுட் 30–ஜெனோராவுடன் ஒரு மாலைப் பொழுது’ நிகழ்ச்சி நடந்தது.
கோல்டுவின்ஸில் அமைந்த ‘ஜெனோரா’ திட்டத்தில் சொகுசு வில்லாக்கள் வாங்கிய 33 வாடிக்கையாளர்கள் இணைந்து இனிய தருணங்களை பகிர்ந்தனர்.
அறிமுக கலந்துரையாடல் நடந்தது. பேச்சாளர்கள் கோபிநாத், ஈரோடு மகேஷ் ‘அண்டை வீட்டார் உறவின் அவசியம்’, ‘அன்பு நிறைந்த முழுமையான இல்லம்’ பற்றி பேசினர்.
ஜென்விஸ்டாஸ் ரியால்டி நிர்வாக பங்குதாரர் சதீஷ்குமார் பேசுகையில், ‘‘கோவையின் தனித்துவமான ‘புராஜெக்ட்’ ஆக ஜெனோரா உள்ளது. இது தனிப்பட்ட முயற்சியால் கிடைத்த வெற்றி அல்ல; நண்பர்களின் கூட்டு முயற்சியில் கிடைத்தது,’’ என்றார்.
முதன்மை செயல் அலுவலர் ஓம் பிரகாஷ், ‘‘இத்திட்டத்தின் மீதான நம்பிக்கையே எங்கள் மதிப்பை கூட்டுகிறது. ஒரு ஊரின் முகவரியாக ‘ஜெனோரா’ இருக்கிறது,’’ என்றார்.
வாடிக்கையாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
