வெள்ளலூர் குப்பை பிரச்னை: நிரந்தர தீர்வுக்கு கோரிக்கை
வெள்ளலூர் குப்பை பிரச்னை: நிரந்தர தீர்வுக்கு கோரிக்கை
UPDATED : ஜூலை 07, 2026 10:46 PM
ADDED : ஜூலை 07, 2026 10:32 PM
கோவை: வெள்ளலுார் குப்பைக் கிடங்கில் இருந்து வீசும் கடும் துர்நாற்றம், சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்த புகார்களை தொடர்ந்து வெள்ளலூர் மகாலிங்கபுரத்தில் கமிஷனர் ரவி தேஜா பார்வையிட்டார்.
'குப்பை மற்றும் துர்நாற்ற பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதற்கு அந்தந்த பகுதிகளிலேயே அறிவியல் அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் நச்சு கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் உள்ளது. மகாலிங்கபுரம், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகர் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீர் வளங்களைப் பாதுகாக்க வேண்டும்' என, குறிச்சி வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டு குழு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு ரவி தேஜா, ''துர்நாற்றத்தை கட்டுப்படுத்த கிருமி நாசினி தெளிக்கப்படும். நச்சு கழிவு நீர் உள்ளே செல்வது தடுக்கப்படும்,'' என, அவர்களிடம் கூறினார்.
