/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம்; ஒழுங்குபடுத்த கோரிக்கை
/
தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம்; ஒழுங்குபடுத்த கோரிக்கை
தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம்; ஒழுங்குபடுத்த கோரிக்கை
தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம்; ஒழுங்குபடுத்த கோரிக்கை
ADDED : செப் 16, 2025 09:45 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, கடைவீதிகளில், குறுகிய ரோடு என அறிந்தும், சிலர் அத்துமீறி தங்களது வாகனங்களை நிறுத்துவதால், நெரிசல் அதிகரிக்கிறது.
பொள்ளாச்சி நகரில், வணிக கடைகள் நிறைந்த பகுதியாக கடைவீதி அமைந்துள்ளது. தவிர, சுற்றுப்பகுதிகளிலும், அதிகப்படியான கடைகள் செயல்படுகின்றன. அதன்படி, தினமும், அதிகப்படியான மக்கள், இங்கு வருகை புரிகின்றனர்.
குறிப்பாக, விசேஷ நாட்கள், பண்டிகை நாட்களில் மக்களின் வருகை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்தே காணப்படுகிறது. ஏற்கனவே, கடை உரிமையாளர்கள் ரோடு வரை, தங்களது கடைகளை விஸ்தரிப்பு செய்துள்ள நிலையில், 'பார்க்கிங்' வசதி முற்றிலும் கிடையாது.
ரோடு குறுகலாக மாறிவிட்ட நிலையிலும், சிலர், தாறுமாறாக கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால், அவ்வழித்தடத்தில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கூட்டத்தின் நடுவே இருசக்கர வாகனங்கள் இயக்கப்படும்போது, சிறு விபத்துகளும் ஏற்டுகிறது. இதனை தடுக்கும் வகையில், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில், வாகனங்கள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கூறுகையில், 'வாடிக்கையாளர்கள் ரோட்டை ஆக்கிரமித்தே வாகனங்களை நிறுத்துகின்றனர். முறையின்றி நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்தும் பாதிக்கிறது. வாகனங்களை முறையாக நிறுத்தி வைக்கும் வகையில், ஒரு பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு, ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.