/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் தாமதம் ;துரிதப்படுத்த எழுந்தது கோரிக்கை
/
ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் தாமதம் ;துரிதப்படுத்த எழுந்தது கோரிக்கை
ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் தாமதம் ;துரிதப்படுத்த எழுந்தது கோரிக்கை
ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் தாமதம் ;துரிதப்படுத்த எழுந்தது கோரிக்கை
ADDED : நவ 17, 2025 01:43 AM
கோவை: ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கலில் ஏற்படும் தாமதத்தை சரிசெய்து, சேவை செயல் திறனை மேம்படுத்த, போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், விண்ணப்பங்கள் ஒப்புதலுக்கு பிறகும் 15 நாட்களுக்கும் மேலாக ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் அட்டைகள் வழங்க தாமதம்; இணையதள சிக்கல்கள், சர்வர் செயலிழப்பு, ஸ்மார்ட் கார்டு இருப்பு குறைவு ஆகியவை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அதனால், பாஸ்போர்ட் சேவையை போன்று, விரைவான செயல்முறையை ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் அமல்படுத்த வேண்டும், அதற்காக இரட்டை விநியோக முறையை அறிமுகப்படுத்தலாம்.
அதன்படி, அருகிலுள்ளவர்கள் அல்லது அவசரத் தேவையுள்ளவர்கள், இறுதி ஒப்புதலுக்குப் பிறகு இரண்டு வேலை நாட்களுக்குள் ஆர்.டி.ஓ. அலுவலகத்திலிருந்து நேரடியாக அட்டைகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்கலாம்.
புதிய வாகனம் பதிவு செய்யும் போது, 'நியமனர்' விவரம் கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும்; இதனால் உரிமையாளர் மரணத்தின் போது வாரிசு மாற்றம் எளிதாகும்.
அதேபோல், விநியோகக் காலக்கெடு மற்றும் நடைமுறைகள் தொடர்பான தெளிவான தகவல்கள் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், ஓட்டுநர் பள்ளிகள், வாகன விற்பனையகங்கள் போன்ற இடங்களில் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டால், பொதுமக்கள் சிரமம் குறைந்து, சேவைத் திறன் மேம்படும் என, சிட்டிசன் வாய்ஸ் ஆப் கோயம்புத்தூர் அமைப்பு சார்பில், அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

