ADDED : ஆக 17, 2026 08:42 PM
அ நிறம் | அளவு
கோவை: இ.பி.எப்., திட்டத்தின் கீழ், வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், இ.பி.எப்., 95 ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,500 மற்றும் அகவிலைப்படி வழங்க வேண்டும்.
இ.எஸ்.ஐ., திட்டத்துக்கான ஊதிய உச்சவரம்பை ரூ.21 ஆயிரத்தில் இருந்து ரூ.42 ஆயிரமாகவும், இ.பி.எப்., திட்டத்துக்கான ஊதிய உச்சவரம்பை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
