ADDED : ஆக 12, 2026 07:34 PM
கோவை: மாநகராட்சி, நகர உள்ளாட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள், டி.பி.சி., பணியாளர்கள், ஸ்பெஷல் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த கூலி முறை ரத்து செய்ய வேண்டும், அவுட்சோர்ஸ் முறை ரத்து செய்யப்பட வேண்டும் என, வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி., உள்ளாட்சி தொழிலாளர் சம்மேளனம் சார்பில், மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக முதல்வருக்கு, ஒவ்வொரு தொழிலாளியும் பணி நிரந்தரம் செய்யக்கோரி, விரைவு தபாலில் கடிதம் அனுப்புவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 24ம் தேதி நகராட்சி நிர்வாக துறையின் மானிய கோரிக்கை சட்டமன்றத்தில் முன் வைக்கப்படும் போது, பணி நிரந்தர அறிவிப்பை வெளியிட வேண்டும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி., மாநில துணைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட நகர உள்ளாட்சி ஓட்டுநர் துாய்மை மற்றும் அனைத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
