/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 11, 2024 06:39 AM
அன்னூர்: ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.
அக்கரை செங்கப்பள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முன்பு, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் பேசுகையில், கட்டுபடியாகும் விலை கிடைக்காததால், தென்னை விவசாயிகள் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர். நோய் தாக்குதல் காரணமாக விளைச்சல் குறைந்துள்ளது. கட்டுப்பாடு இன்றி வெளிநாடுகளில் இருந்து பாமாயில் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகள், ரேஷன் கடையில் வழங்கும் பாமாயிலை நிறுத்திவிட்டு, மானிய விலையில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். இதனால் தென்னை விவசாயிகளின் வாழ்வு மலரும். இறக்குமதி குறையும், என்றார். ஆர்ப்பாட்டத்தில், ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்குவதை நிறுத்த வேண்டும். மானிய விலையில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி, அகில இந்திய விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் செல்வராஜ், நந்தகுமார், அக்கரை செங்கப் பள்ளி நிர்வாகி சுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.