/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளை ஈ, கருந்தலைப்புழு கட்டுப்படுத்த செயல்விளக்கம்
/
வெள்ளை ஈ, கருந்தலைப்புழு கட்டுப்படுத்த செயல்விளக்கம்
வெள்ளை ஈ, கருந்தலைப்புழு கட்டுப்படுத்த செயல்விளக்கம்
வெள்ளை ஈ, கருந்தலைப்புழு கட்டுப்படுத்த செயல்விளக்கம்
ADDED : ஜன 22, 2026 05:26 AM
ஆனைமலை: ஆனைமலை அருகே, தென்னையில் வெள்ளை ஈ மற்றும் கருந்தலை புழுக்களை கட்டுப்படுத்தும் முறை குறித்து மாணவியர் செயல்விளக்கம் அளித்தனர்.
ஆனைமலை அருகே, அங்கலகுறிச்சியில் தமிழ்நாடு வேளாண் பல்கலை தோட்டக்கலை இறுதியாண்டு மாணவியர், ஊரக தோட்டக் கலைப்பணி அனுபவ திட்டத்தின் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்கு தென்னையில் வெள்ளை ஈ, கருந்தலை புழுக்களுக்கான உயிரியல் கட்டுப்பாட்டின் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
தென்னையில் அதிகமாக காணப்படும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் இரைக்கொல்லியான அபெர்டோக்ரைசா ஆஸ்டுரை தென்னையில் விடும் முறையினை விளக்கினர்.
கருந்தலை புழுக்களை கட்டுப்படுத்தும் பிரக்கான் என்னும் ஒட்டுண்ணியை பயன்படுத்தும் முறை குறித்து விளக்கப்பட்டது. உயிரியல் கட்டுப்பாடு முறையினால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ரசாயன பூச்சி கொல்லியை தவிர்த்தல் குறித்து விளக்கினர்.