/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்த செயல்விளக்கம் தோட்டக்கலைத்துறையினர் விழிப்புணர்வு
/
வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்த செயல்விளக்கம் தோட்டக்கலைத்துறையினர் விழிப்புணர்வு
வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்த செயல்விளக்கம் தோட்டக்கலைத்துறையினர் விழிப்புணர்வு
வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்த செயல்விளக்கம் தோட்டக்கலைத்துறையினர் விழிப்புணர்வு
ADDED : மார் 18, 2025 10:14 PM

ஆனைமலை, ; தென்னையில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
ஆனைமலை தாலுகாவில், 23 ஆயிரம் ெஹக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, தென்னையில், சிவப்பு கூன்வண்டு, காண்டாமிருக வண்டு, கருத்தலைப்புழு, ஈரியோபைட், சிலந்தி பூச்சி, வெள்ளை ஈ போன்றவை சேதத்தை ஏற்படுத்துகின்றன.
இவற்றில், தற்போது மகசூலை மிக அதிகளவு பாதிக்கும் ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதல் காணப்படுகிறது. இலைகளின் உட்பகுதியில் சுருள், சுருளாக நீள்வட்ட வடிவில் முட்டைகள் இடுகிறது. இவற்றின் மீது மெழுகு போன்ற வெள்ளை படலம் இருக்கும். இவற்றில், இளம்குஞ்சுகள், முதிர்ந்த ஈக்கள், ஓலையின் பச்சையம் உற்பத்தி திறனை பாதிப்பதால் வளர்ச்சி தடைபட்டு மகசூல் பாதிக்கின்றது.
இதை கட்டுப்படுத்தும் முறை குறித்து, கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் மாகாளி அம்மன் கோவில் அருகே டாக்டர் மயில்சாமி தோட்டத்தில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. கிரேனில் ைஹட்ராலிக் இயந்திரம் வாயிலாக தண்ணீர் பீய்ச்சி அடிப்பது குறித்து விளக்கப்பட்டது.
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:
தென்னை ரகங்களில், ஒட்டு ரகங்களான குட்டை, நெட்டை, நெட்டை குட்டை அதிகளவு பாதிக்கப்படுகிறது. வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த தென்னந்தோப்புகளில் விசைத் தெளிப்பான் வாயிலாக, தண்ணீரை வேகமாக பீய்ச்சியடித்தும், மஞ்சள் நிற ஒட்டுப்பொறி ஏக்கருக்கு, 10 வீதம் மரங்களில் கட்டியும், விளக்குப்பொறி ஏக்கருக்கு, இரண்டு வீதமும் பயன்படுத்தி கட்டுக்குள் கொண்டு வரலாம்.
மேலும், பாதித்த தென்னந்தோப்புகளில் என்கார்சியா என்ற ஒட்டுண்ணியை ஏக்கருக்கு, 10 இலை துண்டுகள் வீதம் பயன்படுத்திலாம். கிரைசோபிட் என்ற பச்சை கண்ணாடி இறக்கை இறை விழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு, 300 வீதம் வைத்து கட்டுப்படுத்தலாம்.
வெள்ளை ஈக்களின் தாக்குதலால் ஏற்படும் கரும்பூஞ்சானத்தை மைதா மாவு பசை கரைசலை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த கூடாது.
அதிகளவில் தாக்குதல் காணப்பட்டால், வேப்ப எண்ணெயில், அசாடிரக்டின், 500 பிபிஎம் அல்லது 10,000 பிபிஎம் என்ற மருந்தினை கலந்து, 2 மில்லி லிட்டர் என்றளவில் பயன்படுத்தலாம்.
இவ்வாறு, கூறினார்.