ADDED : செப் 22, 2026 07:33 PM
கோவை: டெங்கு தடுப்பு குறித்து அரசு, தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதி வார்டன்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
விடுதிகளுக்கான எஸ்.ஒ.பி. எனப்படும் நடைமுறை விதிகளை வெளியிட்டனர்:
விடுதியில், டெங்கு தடுப்பு பணிக்கு பொறுப்பாளர் நியமிக்க வேண்டும்.
வாரந்தோறும், மாநகராட்சி கொடுக்கும் சரிபார்ப்பு பட்டியலை பூர்த்தி செய்ய வேண்டும். அதை சுகாதார பிரிவினர் ஆய்வு செய்வர்.
கொசு உற்பத்தி தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
டெங்கு அறிகுறிகளை கண்டறிய விடுதி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
காய்ச்சல் வந்தவரை தனிமைப்படுத்த வேண்டும்.
48 மணி நேரத்தில் 2 பேருக்கு மேல் காய்ச்சல் வந்தால், மண்டல சுகாதார அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்த விதிகளை வெளியிட்ட கமிஷனர் ரவி தேஜா, ‘‘கோவையில் டெங்கு குறைந்து வருகிறது. ஜூலை 157, ஆகஸ்ட் 121 பேர் பாதிக்கப்பட்டனர். செப்டம்பரில் 45 பேர் தான். வரும் நாட்களில் டெங்கு இன்னும் குறையும்,’’ என்றார்.
