/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மருந்து அடிக்கும் பணி தீவிரம்
/
டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மருந்து அடிக்கும் பணி தீவிரம்
டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மருந்து அடிக்கும் பணி தீவிரம்
டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மருந்து அடிக்கும் பணி தீவிரம்
ADDED : ஏப் 23, 2025 10:37 PM

வால்பாறை; வால்பாறை நகரில், அண்ணாநகரை சேர்ந்த 57 வயது முதியவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, வால்பாறை நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், களப்பணியாளர் பாலசுப்ரமணியம் தலைமையில், துாய்மை பணியாளர்கள் டெங்கு காய்ச்சல் பரவிய குடியிருப்பு பகுதி முழுவதிலும் கொசு மருந்து அடித்தனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் வீடுகளின் அருகில் கழிவு நீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். வீட்டை சுற்றிலும் சுகாதாரமான முறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
குடிநீர் தொட்டியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குடிநீரை நன்கு காய்ச்சிய பின் குடிக்க வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவியபின் உணவு உட்கொள்ள வேண்டும். நோய் பரவலை கட்டுப்படுத்த நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொசு மருந்து தெளிக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது,' என்றனர்.