/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடை சுற்றுவட்டாரத்தில் டெங்கு தடுப்பு பணி தீவிரம்
/
காரமடை சுற்றுவட்டாரத்தில் டெங்கு தடுப்பு பணி தீவிரம்
காரமடை சுற்றுவட்டாரத்தில் டெங்கு தடுப்பு பணி தீவிரம்
காரமடை சுற்றுவட்டாரத்தில் டெங்கு தடுப்பு பணி தீவிரம்
ADDED : டிச 18, 2025 05:22 AM
காரமடை: காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில், மழை பெய்து வருகிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில், மழைநீர் தேங்க வாய்ப்பு அதிகம் உள்ளது. மழைநீர் தேங்கும் பட்சத்தில், அதில் டெங்கு கொசு புழுக்கள் வளர வாய்ப்புள்ளது.
இதையடுத்து, காரமடை நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் உள்ள, 100க்கும் மேற்பட்ட தெருக்களில், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வின்போது, வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் இருந்தால், அபேட் மருந்து ஊற்றுகின்றனர். டயர், தேங்காய், மட்டை போன்ற தேவையற்ற பொருட்கள் இருந்தால், அப்புறப்படுத்த வலியுறுத்துகின்றனர்.