/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் கமிஷனரை சந்திக்க அனுமதி மறுப்பு
/
மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் கமிஷனரை சந்திக்க அனுமதி மறுப்பு
மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் கமிஷனரை சந்திக்க அனுமதி மறுப்பு
மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் கமிஷனரை சந்திக்க அனுமதி மறுப்பு
ADDED : பிப் 15, 2024 06:48 AM

கோவை : கோவை மாநகராட்சியில், ஒப்பந்த முறையில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், சம்பள உயர்வு கோரி, கமிஷனரிடம் முறையிட நேற்று சென்றனர். அவரை சந்திக்க விடாமல், அங்கிருந்த அலுவலர்கள் திருப்பி அனுப்பினர்.
கோவை மாநகராட்சி அலுவலகங்களில், காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களுக்கு, ஒப்பந்த முறையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. இவர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.
கலெக்டர் நிர்ணயித்த குறைந்தபட்ச தினக்கூலி ரூ.759 என நிர்ணயித்து, ஒரு மாதத்துக்கு, 22 ஆயிரத்து, 770 ரூபாய் என, கடந்தாண்டு டிச., 22ல் நடந்த மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜன., மாத சம்பளம் கூடுதலாக வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. ஆனால், 10 ஆயிரம் ரூபாயே வழங்கப்பட்டது.
சம்பளத்தை உயர்த்தி வழங்கக்கோரி, ஒப்பந்த பணியாளர்கள், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனை சந்தித்து முறையிட நேற்று, அவரது அலுவலகத்துக்குச் சென்றனர்.
அவரை சந்திக்க, அங்கிருந்த அலுவலர்கள் அனுமதிக்க மறுத்து விட்டனர். 'ஒரு காகிதத்தில் கோரிக்கையை எழுதி கொடுங்கள்; கமிஷனரிடம் கொடுத்து விடுகிறோம்' என கூறினர்.
எழுதிக் கொடுத்து விட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அவர்கள், அலுவலக வளாகத்தில் ஒன்றாக திரண்டு நிற்கக் கூட அனுமதி மறுத்து, கலைந்து போகச் செய்தனர். அதிகாரிகளின் இந்த உதாசீனப்போக்கு, ஊழியர்களை சங்கடத்துக்கு ஆளாக்கியது.

