/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பார்த்தீனிய களைச்செடிகள் வேளாண்துறை அறிவுரை
/
பார்த்தீனிய களைச்செடிகள் வேளாண்துறை அறிவுரை
ADDED : மார் 19, 2025 08:53 PM
பெ.நா.பாளையம்; பார்த்தீனிய களைச்செடிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என, பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறை, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.
பார்த்தீனியம் களை செடி, விதை வாயிலாக பரவும்; விரைவாக வளரக்கூடியது. மழை, பாசன நீர், மனித செயல்பாடுகள் வாயிலாகவும் பரவும். செடியினால் பலருக்கு தோல் மற்றும் சுவாச குழாய் நோய்கள் ஏற்படும். செடி பரவுவதால், மகசூல் பெரிதும் பாதிக்கும்.
பார்த்தீனிய களைச் செடிகளை, ஆட்களை கொண்டு கையுறை அணிந்து, கைக்களையாக அகற்றலாம். தோல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஆவாரை, அடர் ஆவாரை, துத்தி, சாமந்தி ஆகிய செடிகளின் விதைகளை, மழைக் காலங்களில் விதைக்க வேண்டும்.
மெக்சிகன் வண்டுகள் அதிக எண்ணிக்கையில் சேகரித்து, பார்த்தீனியம் மிகுந்த பகுதிகளில் விட வேண்டும். அட்ராசின், க்ளைபோசிட் மற்றும் மெட்ரி பூசன் உள்ளிட்ட களைக்கொல்லிகளை பயன்படுத்தியும், கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.