/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துணை தேர்தல் கமிஷனர் இன்று ஆய்வு: ஏழு மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு
/
துணை தேர்தல் கமிஷனர் இன்று ஆய்வு: ஏழு மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு
துணை தேர்தல் கமிஷனர் இன்று ஆய்வு: ஏழு மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு
துணை தேர்தல் கமிஷனர் இன்று ஆய்வு: ஏழு மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு
ADDED : நவ 06, 2025 11:27 PM
கோவை: கோவையில் இந்திய தேர்தல் துணை கமிஷனர், மாநில தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையில் ஏழு மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று நடக்கிறது. இதில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த முறை பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்திய தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முறை பணிகளை தமிழகத்தில் மேற்கொண்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக பணிகள் தொ டர்ந்து வருகிறது. இதில் மாவட்டம் முழுக்க உள்ள பத்து சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 10,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சிறப்பு தீவிர திருத்த முறைப்பணிகள் குறித்து நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ளவும், அதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் என்ன நிலவரத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து விரிவாக விளக்கம் கேட்கப்படுகிறது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் அதில் உள்ள நிறை குறைகள் என்ன, எதிர்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.
இது குறித்து கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
இந்திய தேர்தல் கமிஷன் துணை கமிஷனர் கே.கே.திவாரி, மாநில தலைமை தேர்தல் கமிஷனர் அர்ச்சனா பட்நாயக், கரூர், திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை ஆகிய ஏழு மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் பங்கேற்கின்றனர்.
முதலில் கள ஆய்வுப்பணிகளையும் அதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் சிறப்புக் கூட்டமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

