/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கத்திரியில் வேர்-முடிச்சு நுாற்புழு கட்டுப்படுத்த செயல்முறை விளக்கம்
/
கத்திரியில் வேர்-முடிச்சு நுாற்புழு கட்டுப்படுத்த செயல்முறை விளக்கம்
கத்திரியில் வேர்-முடிச்சு நுாற்புழு கட்டுப்படுத்த செயல்முறை விளக்கம்
கத்திரியில் வேர்-முடிச்சு நுாற்புழு கட்டுப்படுத்த செயல்முறை விளக்கம்
ADDED : மார் 27, 2025 11:24 PM
மேட்டுப்பாளையம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் பயிலும் நான்காமாண்டு மாணவிகள், மேட்டுப்பாளையம் பகுதியில் தங்கி விவசாயிகளிடம் அனுபவங்களை கேட்டறிவதுடன், பயிர்களில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த செயல்முறை விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று கத்திரியில் வேர்-முடிச்சு நூற்புழு மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இதுகுறித்து வேளாண் மாணவிகள் கூறியதாவது:-
வேர் முடிச்சு நூற்புழுக்கள், கத்திரி வேர்களில் பித்தப்பைகளை ஏற்படுத்துகின்றன. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய கத்திரி நாற்றில் ஒட்டுக்கட்டுதல் முறை பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளிடம் தற்போது பரவலாக ஏற்பட்டு வருகிறது.
இம்முறையில் 3 மாத சுண்டக்காய் நாற்றினை, வேர் அடிக்கன்றாக பயன்படுத்தி கத்திரி நாற்றினை தண்டுமூலமாக எடுத்துக்கொண்டால், சுண்டக்காய் நாற்றின் நோய் எதிர்ப்புத் திறன் கத்திரியில் ஒட்டுக்கட்டுதல் வாயிலாக செயல்படுகிறது.
இந்நாற்றுகள் 25 நாட்களுக்கு பிறகு விவசாய நிலத்தில் பயிரிடலாம். இதனால் நோய் எதிர்ப்புத் திறன் மேம்படும். ஆண்டு முழுவதும் மகசூல் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த நிகழ்வின் போது காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாக்கியலட்சுமி, வேளாண்மை அலுவலர் சரண்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.----