'தகுதியான எழுத்தாளர்களுக்கு விருது கொடுக்க வேண்டும்'
'தகுதியான எழுத்தாளர்களுக்கு விருது கொடுக்க வேண்டும்'
ADDED : ஜூன் 22, 2026 07:43 AM

கோவை: உலக புத்தக தினத்தை முன்னிட்டு, விஜயா வாசகர் வட்ட விருது வழங்கும் விழா ஆருத்ரா அரங்கில் நேற்று நடந்தது.
ஜெயகாந்தன் விருது அழகிய பெரியவனுக்கும், புதுமைப்பித்தன் விருது செந்தில் ஜெகன்நாதனுக்கும், மீரா விருது கவிஞர் அய்யப்ப மாதவனுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த புத்தக விற்பனையாளருக்கான வானதி விருது, மேட்டுப்பாளையம் அமுதம் புக்ஸ் பாபுவுக்கும், சிறந்த நுாலகருக்கான சக்தி வை.கோ.விருது, வாணியம்பாடி முழுநேரக் கிளை நுாலகத்தின் அரசு நுாலகர் விஜயகுமாருக்கும் வழங்கப்பட்டது.
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தலைமை வகித்து பேசுகையில், ''பல விருதுகள் தகுதியற்றவர்களுக்கு சாதி, மதம், முகம் பார்த்து கொடுக்கப்படுகிறது. இது ஆரோக்கியமான இலக்கிய போக்கு இல்லை. விஜயா வாசகர் வட்டம் அப்படியின்றி தகுதியான படைப்பாளர்களுக்கு கொடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இது போல் எப்போதும் தகுதியானவர்களுக்குதான் விருது கொடுக்க வேண்டும்,'' என்றார்.
விஜயா பதிப்பகம் உரிமையாளர் வேலாயுதம் உட்பட பலர் பங்கேற்றனர்.
