/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.760.92 கோடி ஒதுக்கியும் கிடைத்ததோ.. பொத்தல் சாலைகள்! . தேர்தல் அவசரத்தில் போட்டதால் தரமில்லை
/
ரூ.760.92 கோடி ஒதுக்கியும் கிடைத்ததோ.. பொத்தல் சாலைகள்! . தேர்தல் அவசரத்தில் போட்டதால் தரமில்லை
ரூ.760.92 கோடி ஒதுக்கியும் கிடைத்ததோ.. பொத்தல் சாலைகள்! . தேர்தல் அவசரத்தில் போட்டதால் தரமில்லை
ரூ.760.92 கோடி ஒதுக்கியும் கிடைத்ததோ.. பொத்தல் சாலைகள்! . தேர்தல் அவசரத்தில் போட்டதால் தரமில்லை
ADDED : மார் 19, 2026 05:36 AM

கோவை, மாநகர் பகுதியில் ரோடு போட, ஐந்து ஆண்டுகளில், ரூ.760.92 கோடி ஒதுக்கியது தமிழக அரசு. ஆனால், குறுக்கு ரோடுகள் இன்னும் சீரமைக்கப் படாமல் இருக்கின்றன. பல இடங்களில் போடப்பட்ட ரோடு தரமின்றி இருப்பதால், கனரக வாகனங்கள் செல்லும்போது பெயர்ந்து விடுகிறது.
2021 சட்டசபை தேர்தலுக்கு முன், கோவை மாநகராட்சி சார்பில் ரோடு போட டெண்டர் கோரப்பட்டது. பல்வேறு பணிகள் அவசர கதியில், செய்யப்பட்டன. அத்தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
தி.மு.க. பொறுப்புக்கு வந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அச்சமயம் வந்த அதிகாரிகள், 500 ரோடு பணிகளை ரத்து செய்தனர். அதனால் ரோடு படுமோசமானது. இரு சக்கர வாகனத்தில் செல்லக் கூட முடியாத அளவுக்கு குழிகள் பெரிதாகின.
அதன்பின், குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய், மழை நீர் வடிகால் கட்டுவதற்காக ரோடு தோண்டப்பட்டதால், வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்றதானது.
மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டதால், தமிழக அரசு ரூ.200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கியது. அதன்பிறகும் ரோடு மோசமாக இருந்ததால், மேலும் பல்வேறு திட்டங்களில், ரூ.760.92 கோடி கொடுத்தது.
1,706.18 கி.மீ. நீளத்துக்கு 11 ஆயிரத்து 196 சாலை போட மாநகராட்சி முடிவு செய்தது. இதுவரை 1,438.47 கி.மீ. நீளத்துக்கு, 9,111 சாலை போட்டிருப்பதாக மாநகராட்சி கணக்கு சொல்கிறது. 267.71 கி.மீ. நீளத்துக்கு தற்போது ரோடு போடுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பெரும்பாலான ரோடுகள் இன்னும் குழிகளாகவே உள்ளன. அவசரமாக இரவு நேரத்தில் போடப்படும் ரோடுகள் தரமின்றி இருக்கின்றன.
குழாய் பதிக்க தோண்டிய இடத்தின் மீது போடப்பட்ட ரோடு கீழிறங்குகிறது. இதற்கு மாநகராட்சி விக்டோரியா ஹாலுக்கு எதிரே உள்ள பள்ளத்தை உதாரணமாக சொல்லலாம்.
மாநகராட்சி பிரதான அலுவலகம் எதிரிலேயே குழியை சரியாக மூடாமல் ரோடு போடப்பட்டு, அந்த ரோடும் கீழிறங்கி இருப்பதை கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் இருக்கின்றனர்.
தேர்தல் அவசரம் என தற்போது பல இடங்களில் இரவோடு இரவாக ரோடு போடப்படுகின்றன. அவை எத்தனை நாட்களுக்கு தாங்குமென்பது அதிகாரிகளுக்குதான் வெளிச்சம்!

