/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலி டாக்டர்கள் கண்டறியும் பணி :தீவிரப்படுத்த சுகாதார துறை திட்டம்
/
போலி டாக்டர்கள் கண்டறியும் பணி :தீவிரப்படுத்த சுகாதார துறை திட்டம்
போலி டாக்டர்கள் கண்டறியும் பணி :தீவிரப்படுத்த சுகாதார துறை திட்டம்
போலி டாக்டர்கள் கண்டறியும் பணி :தீவிரப்படுத்த சுகாதார துறை திட்டம்
ADDED : ஜன 15, 2024 12:41 AM
கோவை:போலி டாக்டர்கள் குறித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதார துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் அவ்வப்போது போலி டாக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு வருகின்றனர். போலி டாக்டர்களை கண்டறிய, மாவட்டம் தோறும் சிறப்புக்குழு ஏற்படுத்தப்பட்டு அவர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட இணை இயக்குனர் தலைமையில் சிறப்பு குழு உருவாக்கப்பட்டு, அவர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். மருந்து சப்ளை செய்யும் டீலர்கள், ஸ்டாக்கிஸ்ட்கள் மற்றும் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்கள் ஆகியோரிடமிருந்து, தகவல்கள் பெறப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மருந்துகள் வினியோக பட்டியல் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையிலும், ஆய்வு நடத்தப்படுகிறது. இதனால், போலி டாக்டர்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போலி டாக்டர்கள் குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, சிறப்புக்குழு மீண்டும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சிறப்புக்குழு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்களின் புகார் அடிப்படையில், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறோம். மாவட்டத்தில் போலி டாக்டர்கள் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்புக் குழுவில் உள்ள, அந்தந்த பகுதி மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள், போலீஸ் எஸ்.ஐ., கள் ஆகியோர் மூலம் தகவல்கள் பெறப்படுகின்றன. இதன் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும்' என்றார்.