/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் துணை கமிஷனராக தேவநாதன் பொறுப்பேற்பு
/
போலீஸ் துணை கமிஷனராக தேவநாதன் பொறுப்பேற்பு
ADDED : ஜன 04, 2025 11:05 PM

கோவை: மாநகர போலீஸ் துணை கமிஷனராக, தேவநாதன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனராக (வடக்கு) ஸ்டாலின் பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன், கோவை மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் ஸ்டாலின், சரவண குமார், டி.ஐ.ஜி., சரவண சுந்தர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
புதிய கமிஷனராக சரவண சுந்தர், டி.ஐ.ஜி.,யாக சசி மோகன், வடக்கு துணை கமிஷனராக தேவநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். புதிய கமிஷனர் சரவண சுந்தர் மற்றும் டி.ஐ.ஜி., சசி மோகன் ஆகியோர் கடந்த 1ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், வடக்கு துணை கமிஷனராக தேவநாதன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.,யாக பணியாற்றி வந்தார்.
தெற்கு துணை கமிஷனராக பணியாற்றி வந்த சரவண குமார், சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கோவை மாநகர தெற்கு துணை கமிஷனர் பதிவுக்கு இதுவரை யாரும் நியமனம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.