/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் வளர்ச்சி திட்ட பணிகள்; ஆய்வு மேலாண்மை குழு கூட்டத்தில் விளக்கம்
/
பள்ளிகளில் வளர்ச்சி திட்ட பணிகள்; ஆய்வு மேலாண்மை குழு கூட்டத்தில் விளக்கம்
பள்ளிகளில் வளர்ச்சி திட்ட பணிகள்; ஆய்வு மேலாண்மை குழு கூட்டத்தில் விளக்கம்
பள்ளிகளில் வளர்ச்சி திட்ட பணிகள்; ஆய்வு மேலாண்மை குழு கூட்டத்தில் விளக்கம்
ADDED : ஜூலை 29, 2025 08:04 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, கோடங்கிப்பட்டி அரசுப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
பொள்ளாச்சி அருகே, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைவர் சோபனா தலைமையில் நடந்தது.
தலைமையாசிரியர் தினகரன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தனர்.
வகுப்பறை செயல்பாடுகள், புதிதாக கட்டப்பட்ட மாணவர் கழிப்பிடத்தை பார்வையிட்டனர். கூட்டம் துவங்கியதும், தலைமையாசிரியர் கூட்டப்பொருள் குறித்து விளக்கமளித்து பேசியதாவது:
பள்ளி வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு, மாநில கற்றல் அடைவு ஆய்வு மற்றும் திறன், எண்ணும் எழுத்தும் செயல்பாடுகளில் மாணவர்களின் முன்னேற்றம், தொடர் மதிப்பீடு செய்யப்படுகிறது.
முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு திட்டம், அனைத்து குழந்தைகளும் பள்ளியில் சேர்க்க வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகள், இடை நிற்றல் குழந்தைகளை பள்ளி வருகை உறுதி செய்ய வேண்டும். 'என் பள்ளி என் பெருமை' என்பதில் உறுதியேற்க வேண்டும்.
போக்சோ சட்ட விழிப்புணர்வு, போதைப்பொருள் பயன்பாடு தடுத்தல் பணிகளை மேற்கொள்ளலாம். விளையாட்டில் ஆர்வம் உள்ள குழந்தைகளை ஊக்குவித்தல் வேண்டும். வாழ்வியல் திறன் மேம்படுத்துதல், மாணவர்கள் வங்கி கணக்கு சேமிப்பு குறித்து ஊக்குவித்தல் பணிகளை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு, பேசினார்.
பள்ளி ஆசிரியர் சத்யா நன்றி கூறினார்.
* கிணத்துக்கடவு, மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் திவ்யா தலைமையில் கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் மயிலாத்தாள் வரவேற்றார்.
மாநில கற்றல் ஆய்வு திறன், எண்ணும் எழுத்தும் திட்டம், குழந்தை திருமணம், பாதுகாப்பு, குழந்தை தொழிலாளர்களால் ஏற்படும் தீங்குகள் பற்றி பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கல்வி இடை நிற்றல் தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
இறுதியில், பள்ளி மேலாண்மை குழு சார்ந்த செயல்பாடுகளை காணொலி காட்சி வாயிலாக காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.