/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ. 2.50 கோடியில் அரசு பள்ளியில் வளர்ச்சி பணி; பூமி பூஜையுடன் துவக்கம்
/
ரூ. 2.50 கோடியில் அரசு பள்ளியில் வளர்ச்சி பணி; பூமி பூஜையுடன் துவக்கம்
ரூ. 2.50 கோடியில் அரசு பள்ளியில் வளர்ச்சி பணி; பூமி பூஜையுடன் துவக்கம்
ரூ. 2.50 கோடியில் அரசு பள்ளியில் வளர்ச்சி பணி; பூமி பூஜையுடன் துவக்கம்
ADDED : டிச 15, 2024 11:34 PM
கோவில்பாளையம்; எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.
சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சி.ஆர். சுவாமிநாதன் நினைவு நன்கொடை திட்டத்தில், கூட்ட அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் 2 கோடியே 50 லட்சம் ரூபாயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழா பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. பணிகளை கோவை கலெக்டர் கிராந்தி குமார் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு, சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் நிறுவனம் சார்பில் விருதுகள் மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
அறக்கட்டளை நிர்வாகிகள் பேசுகையில், 'எஸ்.எஸ்.குளம் பள்ளியில் கூட்ட அரங்கம், ஆய்வகங்கள் கட்டப்படும். வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வகம் கட்டித் தரப்படும்.
எஸ்.எஸ்.குளம் அரசு மாணவர் விடுதியில் சுற்றுச்சுவர் மற்றும் பேவர் பிளாக் தளம் அமைத்து தரப்படும்,' என்றனர்.
நிகழ்ச்சியில், சி.ஆர்.ஐ., நிறுவனத் தலைவர் சவுந்தரராஜன், சி.ஆர்.எஸ்., நினைவு அறக்கட்டளை தலைவர் பாலசுந்தரம், ராக் அமைப்பின் தலைவர் துளசிதரன், அட்மா ஒன்றிய தலைவர் சுரேஷ், பள்ளி தலைமை ஆசிரியை விமலா உள்பட பலர் பங்கேற்றனர்.

