/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் முன் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களால் பக்தர்கள் பாதிப்பு
/
கோவில் முன் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களால் பக்தர்கள் பாதிப்பு
கோவில் முன் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களால் பக்தர்கள் பாதிப்பு
கோவில் முன் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களால் பக்தர்கள் பாதிப்பு
ADDED : செப் 30, 2024 05:34 AM

மின் பெட்டிகள் சேதம்
கிணத்துக்கடவு தாலுகா அலுவலக வளாகத்தின் உள்பகுதியில் உள்ள, மின் கம்பத்தில் மின் பெட்டிகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. மழை நேரத்தில் நனைந்து சேதம் அடையும் முன் மின்துறை அலுவலர்கள் இதை கவனித்து சரி செய்ய வேண்டும்.
- -சந்தோஷ், கிணத்துக்கடவு.
போஸ்டர் அலங்கோலம்
கிணத்துக்கடவு, மேம்பால தூண்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என அறிவிப்பு இருந்தும், அதிக அளவு கட்சி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கவனித்து, போஸ்டர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- -கண்ணன், கிணத்துக்கடவு.
விதிமீறும் வாகனங்கள்
பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் வீதியில், ரோட்டின் இரு புறங்களிலும் அதிக அளவு வாகனங்கள் நிறுத்தப்படுவதால், ரோட்டில் செல்லும் மற்ற வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இங்கு நிறுத்தப்படும் வாகனங்களை கட்டுப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -டேவிட், பொள்ளாச்சி.
ஒன் வேயில் வாகனங்கள்
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரவுண்டானா பகுதியில் இருந்து, கடை வீதிக்கு செல்லும் ரோட்டில் பைக் ஓட்டுநர்கள், ஒன் வே திசையில் பயணிப்பதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, போலீசார் இதை கவனித்து உரிய அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - அந்தோணி, பொள்ளாச்சி.
போக்குவரத்து நெரிசல்
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் முன், விதிமுறையை மீறி அதிகமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பிற வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - வேல்முருகன், வால்பாறை.
சரியாக மூடவில்லை
உடுமலை, பசுபதி வீதியில் பாதாள சாக்கடை குழிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு ரோடு தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின், குழிகள் சமமாக மூடப்படாமல் ரோடு பள்ளமாக மாறியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
- ராஜேஸ்வரி, உடுமலை.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை - கொமரலிங்கம் ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. பஸ் போன்ற வாகனங்கள் செல்லும்போது, மற்ற வாகனங்கள் எதிரில் வருவதற்கு வழியில்லாமல் காத்திருந்து வர வேண்டியுள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- விக்னேஷ், மடத்துக்குளம்.
தெருநாய்கள் தொல்லை
உடுமலை, எஸ்.வி., புரம், பி.வி லே - அவுட் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றுகின்றன. அப்பகுதியில் பொதுமக்கள் வாகனங்களில் செல்லும்போது துரத்திச்செல்கின்றன. இரவு நேரங்களில் வீடுகளில் முன் சண்டையிட்டுக்கொள்வதால் பொதுமக்கள் வெளியில் வருவதற்கும் அச்சப்படுகின்றனர்.
- சந்திரசேகர், உடுமலை.
துாசியினால் பாதிப்பு
உடுமலையில், சரக்கு வாகனத்தில் அளவுக்கு அதிகமாக கற்களை ஏற்றி செல்கின்றனர். இதனால், ரோடு முழுவதும் துாசி படலம் ஏற்படுகிறது. இதனால், ரோட்டில் செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சங்கர், உடுமலை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, பஸ் ஸ்டாண்ட் எதிரே கார்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். போக்குவரத்து போலீசார் அருகில் இருந்தும் தொடர்ந்து இவ்வாறு வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பொதுமக்கள் நடுரோட்டில்தான் நடந்துசெல்ல வேண்டியள்ளது. ரோட்டை கடப்பதற்கும் சிரமப்படுகின்றனர்.
- பாலகிருஷ்ணன், உடுமலை.
மழைநீர் தேக்கம்
உடுமலை கச்சேரி ரோட்டில் மழை நீர் செல்ல வழி இல்லாமல் தேங்கியுள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. மழைநீர் தேங்காமல் வடியும் வகையில், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வம், உடுமலை.