/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா; பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கம்
/
சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா; பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கம்
சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா; பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கம்
சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா; பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கம்
ADDED : அக் 23, 2025 12:07 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கந்த சஷ்டி சூரசம்ஹாரத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் நேற்று காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரத்திருவிழா நேற்றுமுன்தினம் மாலை, 5:30 மணிக்கு, அனுக்ஞை, வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று காலை, 10:00 மணிக்கு கந்தசஷ்டி உற்வசம், காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க முருகப்பெருமானுக்கு காப்பு அணிவிக்கப்பட்டது.
பக்தர்கள் விரதம் துவங்க கைகளில் காப்பு கட்டிக்கொண்டனர். அதன்பின் உற்சவ மூர்த்தியான வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று முதல் வரும், 28ம் தேதி வரை நான்கு கால அபிேஷக ஆராதனைகள் நடக்கின்றன. வரும், 26ம் தேதி வேல்வாங்கும் உற்சவமும், 27ம் தேதி மாலை, 4:30 மணிக்கு, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் சூரசம்ஹாரமும் நடக்கிறது.
வரும், 28ம் தேதி காலை, 10:00 மணிக்கு மஹா அபிேஷகம், தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 29ம் தேதி மாலை, 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
* குரும்பபாளையம் அம்மணீஸ்வரர் கோவிலில், நான்காம் ஆண்டு கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 5:00 மணிக்கு கொடியேற்றம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், காலை, 7:00 மணிக்கு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.
இன்று முதல் வரும், 27ம் தேதி வரை தினமும் காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், காலை, 7:00 மணிக்கு அபிேஷகம், காலை, 8:00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.
வரும், 26ம் தேதி மாலை, 5:00 மணிக்கு மாரியம்மனிடம் இருந்து முருகப்பெருமான் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 27ம் தேதி மாலை, 4:00 மணிக்கு ஊர் மைதானத்தில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு மஹா அபிேஷகம், இரவு, 9:00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.
வரும், 28ம் தேதி காலை, 7:45 மணிக்கு திருக்கல்யாணம், காலை, 8:45 மணிக்கு சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை, மதியம், 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும்; மாலை, 4:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கிறது.
வால்பாறை வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 13ம் ஆண்டு கந்தசஷ்டி விழாவையொட்டி, நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
அதனை தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் தேவியருடன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை, 10:00 மணிக்கு கோவில் நுழைவுவாயிலில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிேஷக பூஜைகள் செய்யப்பட்டு திருக்கொடி ஏற்றப்பட்டது.
விழாவில், வால்பாறை கோர்ட் மாஜிஸ்திரேட் மீனாட்சி, விழா ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வரும், 24ம் தேதி மாலை, 4:00 மணிக்கு மகளிர் குழு சார்பில் திருவிளக்கு பூஜை நடக்கிறது. அதனை தொடர்ந்து சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடக்கிறது.
வரும், 27ம் தேதி காலை, எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலில் அன்னையிடம் இருந்து வேல் வாங்கும் உற்சவம் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு புதிய பஸ் ஸ்டாண்டில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி துவங்கிறது. ஸ்டேன்மோர் சந்திப்பு, காந்திசிலை, சுப்ரமணிய சுவாமி கோவில் முன்புறத்திலும் சூரனை, முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
வரும், 28ம் தேதி காலை, 11:00 மணிக்கு சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கந்தசஷ்டி திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.
கிணத்துக்கடவு கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நிகழ்ச்சி காப்பு கட்டுதலுடன் நேற்று துவங்கியது. 28ம் தேதி, காலை 9:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. அதன்பின், தேரோட்டம் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.