/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம் பக்தர்கள் பரவசம்
/
சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம் பக்தர்கள் பரவசம்
சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம் பக்தர்கள் பரவசம்
சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம் பக்தர்கள் பரவசம்
ADDED : ஜூன் 08, 2025 10:06 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி, மின்நகர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா, கோலகலமாக நடந்தது.
பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி, மின்நகரில், 36 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், கும்பாபிேஷக விழா கடந்த, 6ம் தேதி, கணபதி ேஹாமத்துடன் துவங்கியது.
நேற்று, காலை விக்னேஸ்வரபூஜை, சங்கல்பம், நான்காம்கால ேஹாமம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடைபெற்றது.
தவிர, புதிய பரிவார மூர்த்திகளான ஞானசரஸ்வதி, சுப்ரமணியர், தட்ஷணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கா பரமேஸ்வரிக்கு சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்து, அன்னதானம் உட்கொண்டனர்.
* பொள்ளாாச்சி அருகே எஸ்.நல்லுாரில் பாலதண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், கும்பாபி ேஷக விழா, நேற்றுமுன்தினம் துவங்கியது.
அன்றைய தினம், மகாகணபதி ேஹாமம், மகாலட்சுமி ேஹாமம், நவகிரக ேஹாமம், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், முகற்கால மண்ட வேதிகா பூஜை, யாகாரம்பம், மூலமந்தரசகித ேஹாம், தீபாராதனை யந்திரபிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நேற்று காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால மண்டப வேதிகா பூஜை, யாகாரம்பம், கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, பாலதண்டாயுதபாணி கோவில் கோபுர கலசத்துக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபி ேஷகம் செய்யப்பட்டது.
சுவாமிக்கும் கும்பாபி ேஷகம், அபிேஷகம் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
* நெகமம் அருகே உள்ள பனப்பட்டியில், விநாயகர், பாலமுருகன், மாகாளியம்மன், நவக்கிரக கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள், 6ம் தேதி துவங்கியது. இதில், மங்கள இசை, கும்பாபிஷேக விழா ஆரம்பம், கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தன பூஜை, முதற்கால யாக பூஜை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
7ம் தேதி, இரண்டாம் கால யாக பூஜை, சூரிய பூஜை, வேதிகார்ச்சனை, கோபுர கலசம் வைக்கும் நிகழ்வு, மூலமந்திர ஹோமம், மூன்றாம் கால யாக பூஜை, சுவாமிக்கு விசேஷ உபசார பூஜைகள் தீபாராதனை பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடந்தது.
நேற்று, 8ம் தேதி, நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், விநாயகர், பாலமுருகன், மாகாளியம்மன் ஆலய விமான கோபுரம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் மற்றும் அபிஷேகம், அலங்காரம், தசதானம், தச தரிசனம், மகாதீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.