ADDED : ஜூன் 29, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
அன்னுார்: பொகலுார் ஊராட்சி, சொக்கட்டாம்பள்ளியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலுக்கு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
சொக்கட்டாம்பள்ளி மக்கள் கூறுகையில், 'இங்குள்ள மாகாளியம்மன் கோவிலில் ஒவ்வொரு அமாவாசையன்றும், ஆண்டுக்கு ஒரு முறை குண்டம் திருவிழாவும் நடத்தி வருகிறோம். இதை ஒட்டியுள்ள பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கோவிலுக்கு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கிறார். இது குறித்து தாலுகா அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்துள்ளோம். 100 ஆண்டுகளாக வழிபட்டு வரும் கோவிலில் தடையில்லாமல் தொடர்ந்து வழிபட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
