/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
/
ஒரு லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
ADDED : ஆக 20, 2025 12:36 AM
சூலுார்; சூலுார் வட்டாரத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் இரு கட்டமாக நடந்தது.
முதல் கட்டத்தில், 129 அரசு பள்ளிகள், 105 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 10 கல்லுாரிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
ஒரு வயது முதல், 19 வயது வரை, 92 ஆயிரத்து, 200 மாணவ, மாணவியர் உள்ளனர். அதில், 86 ஆயிரத்து, 430 பேருக்கு, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. 20 முதல், 30 வயது கொண்ட பெண்கள், 22 ஆயிரத்து, 107 பேர் உள்ளனர். அதில், 20 ஆயிரத்து, 588 பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
வட்டார மருத்துவ அலுவலர் உமர் பரூக் கூறுகையில், 'குடற்புழு தொற்றால், சோர்வு, சுகவீனம், பசியின்மை, வயிற்று வலி, வயிற்று போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். அவற்றில் இருந்து பாதுகாக்க குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படுகின்றன,' என்றார்.