/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரி பட்டமளிப்பு
/
தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரி பட்டமளிப்பு
ADDED : டிச 23, 2024 04:31 AM

போத்தனூர்: கோவை, நவக்கரை அருகேயுள்ள தனலட்சுமி சீனிவாசன் இன்ஜி., கல்லூரியின், 12வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.
மேவரிக்ஸ் தலைமை வழிகாட்டி கிருஷ்ண பாலகுருநாதன் பேசுகையில், ''இந்திய இளைஞர்களின் திறமையை கண்டு உலகமே வியக்கிறது. பட்டதாரிகள் வேலை தேடுவோராக இல்லாமல், தொழில்முனைவோராக பலருக்கு வேலை வழங்குபவராக உருவாக வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, 66 முதுகலை பட்டதாரிகள் உட்பட, 262 பேருக்கு பட்ட சான்றிதழை கல்வி குழும தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர் வழங்கினர்.
முன்னதாக, கல்லூரி முதல்வர் ஜெகதீசன் ஆண்டறிக்கை வாசித்தார். செயலாளர் நீலராஜ், இயக்குனர் வினோத், டீன் (அகாடமி) பாகிரதி மற்றும் பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

