UPDATED : அக் 04, 2026 12:01 AM
ADDED : அக் 03, 2026 11:58 PM

தாராபுரம்: ‘‘தாராபுரம் மக்கள் ஏமாளிகள், சுயமரியாதை இல்லாதவர்கள், பயந்து ஓட்டுப்போட்டு விடுவார்கள் என த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா நினைத்துக் கொண்டிருக்கிறார்,’’ என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசினார்.
தாராபுரம் (தனி) தொகுதி தி.மு.க., வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து நொச்சி பாளையத்தில் அவர் பேசியதாவது: த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா சாதாரண பல்டி இல்லை; அந்தர் பல்டி அடிப்பவர். அவர் அழ வேண்டியதில்லை; நீங்கள் தான் அழ வேண்டும். தாராபுரம் மக்கள் ஏமாளிகள், சுயமரியாதை இல்லாதவர்கள், பயந்து ஓட்டுப்போட்டு விடுவார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும்.
மதுராந்தகத்தில் காட்டு கத்தல், சட்டசபையில் பேசினாலும் காட்டு கத்தல். இப்போது தாராபுரத்தில் கத்தாமல் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த ஆட்சியில் மின்வெட்டு, அரிவாள் வெட்டு மட்டும்தான் உள்ளது. முதல்வர் தொகுதியிலேயே தினமும் மக்கள் போராடி வருகின்றனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத அரசுக்கு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
