/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' ஷாப்பிங் திருவிழாவுக்கு கெளம்பியாச்சுங்களா? குடும்பமாக வந்து 'பர்ச்சேஸ்' செய்யும் மக்கள்; தேவையான பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்க வாய்ப்பு
/
'தினமலர்' ஷாப்பிங் திருவிழாவுக்கு கெளம்பியாச்சுங்களா? குடும்பமாக வந்து 'பர்ச்சேஸ்' செய்யும் மக்கள்; தேவையான பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்க வாய்ப்பு
'தினமலர்' ஷாப்பிங் திருவிழாவுக்கு கெளம்பியாச்சுங்களா? குடும்பமாக வந்து 'பர்ச்சேஸ்' செய்யும் மக்கள்; தேவையான பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்க வாய்ப்பு
'தினமலர்' ஷாப்பிங் திருவிழாவுக்கு கெளம்பியாச்சுங்களா? குடும்பமாக வந்து 'பர்ச்சேஸ்' செய்யும் மக்கள்; தேவையான பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்க வாய்ப்பு
UPDATED : ஆக 16, 2025 10:44 PM
ADDED : ஆக 16, 2025 10:37 PM

கோவை; இன்று சண்டே; விடுமுறை தினம். வீட்டில் ஓய்வெடுக்கலாம் என நினைத்து படுக்கையில் சுருண்டு கிடக்க வேண்டாம். உங்களுக்காகவே, உங்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே, கோவையின் 'நம்பர் ஒன்' நாளிதழான 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில், 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி நடத்தப்படுகிறது.
ஒரே கூரையின் கீழ்
உங்களுக்கும், உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் தேவையான பொருட்களை 'பர்ச்சேஸ்' செய்யலாம். குடும்பம் குடும்பமாக மக்கள் வருகை தந்து, வீட்டுக்குத் தேவையானவற்றை தேர்ந்தெடுத்து, வாங்கிச் செல்கின்றனர்.
'தினமலர்' நாளிதழ் மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து நடத்தும், 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி நேற்று முன்தினம் துவங்கியது.
குழந்தைகள், இல்லத்தரசிகள், கல்லுாரி மாணவ, மாணவியர், இளம்பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என, அனைத்து தரப்பினரின் தேடலுக்கு தீனி போடும் வகையில் பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன. தேவையானதை பொறுமையாக தேர்வு செய்து, வாங்கிச் செல்கின்றனர்.
வகை வகையான பேக்குகள்
காய்கறிகளை பாதுகாப்பாக வைத்திருக்க ஐந்தடுக்கு 'டிரே' விற்கப்படுகிறது. பெண்களை ஈர்க்கும் வகையில் லெதர் பேக், ஹேண்ட் பேக், மணி பர்ஸ், பெல்ட், செப்பல், டிராவல் பேக்குகள் உள்ளன.
டூர் செல்லும்போது, காரில் எடுத்துச் செல்லும் வகையில் மடக்கு சேர், கட்டில் மற்றும் நாற்காலி உள்ளிட்டவை விற்பனைக்கு உள்ளன. சணல் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பேக்குகள் பல்வேறு டிசைன்களில் விற்பனைக்கு இருக்கின்றன. தையல் மெஷின் மற்றும் எம்ப்ராய்டரி மெஷின்களும் உள்ளன.
ராஜஸ்தான் கலைப்பொருட்கள்
ராஜஸ்தானில் இருந்து தருவிக்கப்பட்டுள்ள கலைநயமிக்க பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. ராஜஸ்தான் மார்பிள்ஸில் தயாரிக்கப்பட்ட யானை சிலை, மலை முகடுகளில் தண்ணீர் வழிந்தோடி வரும் கட்டமைப்பு போன்றவை வரவேற்பறையை மேலும் அழகூட்டும். இவை தவிர, பர்னிச்சர் ரகங்கள், கார்கள், இரு சக்கர வாகனங்கள், வீடு மற்றும் மனை வாங்கவும் அரங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஸ்டால்களாக சென்று வரும்போது, ஐஸ்கிரீம் சாப்பிடலாம்; கோலி சோடா பருகலாம்.
குட்டீஸ்களுக்கு 'கேம் ஜோன்'
குட்டீஸ்களை குஷிப்படுத்த 'கேம் ஜோன்' ஒதுக்கப்பட்டிருக்கிறது. படகு சவாரி, வாட்டர் ரோலிங், புல்லட், காளையை அடக்கும் விளையாட்டு உள்ளிட்ட எண்ணற்ற விளையாட்டுகள் இருக்கின்றன.
பாலுாட்டும் அறை வசதி
கண்காட்சிக்கு வரும் இளம் தாய்மார்கள், குழந்தைகளுக்கு பாலுாட்டுவதற்காக, தனியாக பாலுாட்டும் அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அவசர உதவிக்காக, கே.எம்.சி.ஹெச்., சார்பில் முதலுதவி மையம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
கெளம்பியாச்சா!
'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' அரங்குகளில் உள்ள பொருட்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்; பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். 'வீக் எண்ட்' விடுமுறையை குடும்பத்தோடு ஜாலியாக கொண்டாடும் வகையில், 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சிக்கு வாங்க. குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிச் செல்லலாம். இன்றும், நாளையும் கண்காட்சி நடைபெறும்; வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள். என்னங்க... கிளம்பியாச்சுங்களா, ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்க்கு!
இணைந்த கரங்கள்!
'தினமலர்' நடத்தும் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சியை, இ.எல்.ஜி.ஐ., (எல்.ஜி.,) அல்ட்ரா நிறுவனம், கோவை லட்சுமி, 'வுட் ஸ்பார்க்', நியூ மென்ஸ், சுஜாதா, பேபர் மற்றும் ஆல்பா பர்னிச்சர் ஆகிய நிறுவனங்கள், 'கோ--ஸ்பான்சர்'களாக கரம் கோர்த்திருக்கின்றன. இந்நிறுவனங்களின் ஸ்டால்களில் வாங்கும் பொருட்களுக்கு எண்ணற்ற சலுகைகள் அளிக்கப்படுகின்றன.