ADDED : ஆக 31, 2026 06:42 PM
அ நிறம் | அளவு
கோவை: போத்தனுாரில் உள்ள பாத்திமா கனி திருமண மண்டபத்தில் இன்று மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடக்கிறது. தெற்கு வட்டத்தை சேர்ந்த மாற்று திறனாளிகள் மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 1 வரை பங்கேற்கலாம்.
அடையாள அட்டை பதிவு, புதுப்பித்தல், மருத்துவ பரிசோதனை, மருத்துவ சான்றிதழ் வழங்குதல், இலவச அறுவை சிகிச்சைக்கு பயனாளிகள் தேர்வு, கல்வி மற்றும் பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக் கடன், உதவி உபகரணங்கள், பேருந்து அட்டை போன்ற திட்டங்களுக்கு விண்ணப்பம் அளிக்கலாம்.
ஆதார் பதிவு மற்றும் திருத்தம், ரேஷன் கார்டு பெயர் அல்லது முகவரி மாற்றம் செய்யலாம். புதிதாக பதிவு செய்ய ஆதார் அட்டை, குடும்ப அட்டை, 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து வர வேண்டும்.
