/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிதிலமடைந்த ரோடு ரூ.35.5 லட்சத்தில் சீரமைப்பு
/
சிதிலமடைந்த ரோடு ரூ.35.5 லட்சத்தில் சீரமைப்பு
ADDED : செப் 10, 2025 09:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, பெரியார் நகரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள தெருக்களில் ஒரு சில இடங்களில் ரோட்டில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டிருந்ததால், வாகனம் ஓட்டுநர்கள் அவதிப்பட்டனர். மேலும், ரோட்டில் சேதமடைந்த பகுதிகளை சரி செய்து தரக்கோரி மக்கள் வலியுறுத்தினார்கள்.
இதை தொடர்ந்து, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 35.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 800 மீட்டர் தூரத்துக்கு தார் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது.