/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழ்வில் வெற்றி பெற விடாமுயற்சி அவசியம்; என்.ஐ.ஏ., நிறுவனர் தின விழாவில் பேச்சு
/
வாழ்வில் வெற்றி பெற விடாமுயற்சி அவசியம்; என்.ஐ.ஏ., நிறுவனர் தின விழாவில் பேச்சு
வாழ்வில் வெற்றி பெற விடாமுயற்சி அவசியம்; என்.ஐ.ஏ., நிறுவனர் தின விழாவில் பேச்சு
வாழ்வில் வெற்றி பெற விடாமுயற்சி அவசியம்; என்.ஐ.ஏ., நிறுவனர் தின விழாவில் பேச்சு
ADDED : பிப் 07, 2025 09:31 PM

பொள்ளாச்சி; ''வாழ்வில் வெற்றி பெற விடா முயற்சி, கடின உழைப்பு மிக முக்கியமாகும்,'' என, என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தின விழாவில், கல்வி நிறுவன தலைவர் மாணிக்கம் பேசினார்.
பொள்ளாச்சி என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின், 71ம் ஆண்டு நிறுவனர் தின விழா மற்றும், 51ம் ஆண்டு நினைவு சொற்பொழிவு, மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில் நடந்தது. என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிஹரசுதன் வரவேற்றார்.
என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் தலைமை வகித்து பேசியதாவது:
வேலை வாய்ப்புகளுக்காக, தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு இடம் பெயர்வதால் தமிழகத்தின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. அதே சமயம், தமிழகத்தில் பணிச்சூழலில் பெண்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கல்வியின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்வி முக்கிய பங்காற்றுகிறது. விளையாட்டுகளில் தனிநபர்கள் வெற்றி பெறும் வரை, விடா முயற்சியுடன் போராடுவது போன்று; வாழ்வில் வெற்றி பெற விடா முயற்சி, கடின உழைப்பு மிக முக்கியமாகும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தன்னம்பிக்கை பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையா, என்.ஐ.ஏ., நிறுவனர் நாச்சிமுத்து கவுண்டர் குறித்து பேசினார். கொங்கு நாட்டு சாதனையாளர் விருது, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு வழங்கப்பட்டது.
கோவை சக்தி சுகர்ஸ் நிறுவன துணை தலைவர் பாலசுப்ரமணியம், என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் இணைச் செயலாளர் சுப்ரமணியன், எம்.சி.இ.டி., ஆலோசகர் கார்த்திக்கேயன், முதல்வர் கோவிந்தசாமி, வாணவராயர் வேளாண் கல்லூரி இயக்குனர் கெம்பு செட்டி, முதல்வர் பிரபாகர், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அசோக், கல்லுாரி டீன்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். என்.ஐ.ஏ., செயலர் ராமசாமி நன்றி கூறினார்.